ஆரணியில் ஒருநாளைக்கு 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசி பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றது. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் பொன்னி, பிபிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆரணியிலிருந்து தினந்தோறும் ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் விளைச்சல் குறைவால் அரிசி உற்பத்தி குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் நெல் சாகுபடி குறைந்து வருவதால் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ அரிசி ரூ.15 வரை விலை உயர்வு
இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு மட்டும் தமிழகத்திலிருந்து அரிசி 20 சதவீதமும் ஆரணியிலிருந்து 5 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது நெல் விளைச்சல் மிக குறைவாக இருப்பதற்காகவே அரிசி விலைகள் தற்போது ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 15 வரையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் கூடுதலாக அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் தான் தற்போது நாம் இருந்து வருவதாகவும் தெரிவிகின்றனர். அரிசி விலை குறைய வேண்டுமானால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிகின்றனர். தமிழகத்தில் தஞ்சாவூர் அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் நெல் சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் விலை உயர்ந்த நெல்களான பொன்னி நெல் சாகுபடியில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருபவர்களின் வாரிசுகள் தற்போது ஐ.டி பீல்டிலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால்
இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை
அடுத்த தலைமுறை இளைஞர்கள் விவசாயம் என்றால் என்வென்றே தெரியாமல் காணாமல் போகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உணவிற்கு மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கையேந்தும் நிலைமை உருவாகும் நிலையில் உள்ளோம். விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசு முழு மானியம் வழங்கி விவசயாத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயம் பயன்படுத்த கூடிய மூலபொருட்களான பொட்டாசியம், யூரியா, உரம் உள்ளிட்ட பொருட்கள் விலையில் தொடர்ந்து உயர்வு ஏற்பட்டாலும் நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நேரிடையாக பாதிக்கப்படும் கூடும் என்பதால் அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அரிசியின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.