தூத்துக்குடி மாவட்டம் பொத்தகாலன்விலை கிராமத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆளுக்கு 20 ரூபாய், 30 ரூபாய் என வசூல் செய்து புத்தன்தருவை பாசன வாய்க்காலை தூர் வாரும் பணியை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.




சாத்தான்குளம் ஒன்றியத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக வைரவம் தருவை, புத்தன் தருவை ஆகிய குளங்கள் விளங்கி வருகின்றன. தற்போது இந்த குளங்களில் நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் போதிய மழை இல்லாததால் இந்த குளங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது. இதனால் சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரையே கிராம மக்கள் விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தனர். இப்பகுதி மக்கள் விவசாயிகள் பயனடையும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சடையனேரி ஏரி கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் எனவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர் வர ஏதுவாக தங்கள் பகுதியில் உள்ள கால்வாயை தாங்களே தூர்வாரி சீரமைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாஸ்தாவி நல்லூர் விவசாய நல சங்க நிர்வாகிகள் நங்கை மொழி பகுதியில் இருந்து புத்தன் தருவை பகுதிக்கு திரும்பும் சடையனேரி கால்வாய் நீர்வழிப் பாதையை சீரமைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவின் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்த காலம் விலை பகுதியில் வரும் சடையனேரி கால்வாயில் கிராம மக்களிடம் நிதி திரட்டி சீரமைக்க சாஸ்தாவின் நல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் லூர்து மணி தலைமையில் ஊர் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.அதன்படி கிராம மக்கள் அவர்களுக்கு இயன்ற நிதியை அளித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பங்கேற்புடன் கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.




பொத்தகாலன்விளை பகுதியில் தூர்ந்த நிலையில் காணப்பட்ட கால்வாயில் இருந்து செடி, கொடிகள், முட்சடிகள் மற்றும் குப்பைகளை கிராம மக்கள் அகற்றினர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம் சூழ்ந்த பகுதிகளை தூர்வாரி சீரமைத்தனர். வைரவம் தருவை குளத்துக்குச் செல்லும் பகுதியில் இருந்து முதல் ஒரு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் சடையினரி கால்வாயில் தண்ணீர் வந்தால் வைரவம் தருவை குளத்திற்கு தண்ணீர் தடங்கல் இன்றி விரைவாக சென்று நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சீரமைப்பாணியில் இதன் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து மணி தலைமையில் சாஸ்தாவின் நல்லூர் விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் எட்வல்வின் காமராஜ், வேதக்கண் அறக்கட்டளை நிறுவனர் ஜோசப் சேவியர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிராம மக்கள் பங்களிப்புடன் கால்வாய் முழுமையாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இந்த நிர்வாகிகள்.