பருவம் தவறிய மழையால் கோவில்பட்டி கோட்டத்தில் வெள்ளைச் சோளம் கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


ஆண்டுதோறும் புரட்டாசி முதல் கார்த்திகை மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரி விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவில் பெய்த வடகிழக்கு பருவமடையால் பயிர்கள் அழுகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு ஈடு கட்டிவிடலாம் என நம்பிக்கையுடன் இருந்துள்ளனர் விவசாயிகள்.




இந்தாண்டு ராபி பருவத்தில் புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயிர் வகைகள், பணப்பயிர்கள் போன்ற பல்வேறு பயிர்களை மானாவாரி விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியான நேரத்துக்கு துவங்கவில்லை. இதனால் விதைக்கப்பட்ட விதைகள் கருகின. ஐப்பசி மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின்னர் மழை துவங்கியது. விவசாயிகள் இரண்டாவது முறையாக உழவு செய்து மறு விதைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இரட்டைச் செலவு ஏற்பட்டது. உரமிடுதல், களைஎடுத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பருவம் தப்பியமழையால் பயிர்கள் தேர்ச்சி இன்றி காணப்பட்டன.




கடைசி விதைப்பாக பயிரிடப்பட்ட கொத்தமல்லி, சூரியகாந்தி ஆகியவையும் பூப்பிடித்து மணிப்பிடித்து வந்திச்சி எல்லாம் சரியாயிடும்னு நினைச்ச  விவசாயிகள் மணிப்பிடித்த பயிர்களை அறுவடை செய்ய தயாராகி வந்தனர். ஆனால் ஆனால் தேவையில்லாம 10 நாட்களாக பெய்த சாரல் மலையால் வெள்ளைச் சோளம் உளுந்து பாசி கொத்தமல்லி போன்ற தானியங்கள் மழைக்கு கருத்து கெட்டுப் போய்விட்டதாக கூறும் விவசாயிகள், இதனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்கின்றனர்.




இதுகுறித்து கரிசில் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, மக்காச்சோளக் கதிரை சுற்றி 7 அடுக்கில் 9 வளையங்கள் காணப்படுவதால் மக்காச்சோளம் கதிருக்கு மழை பெய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. இதனால் வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, உளுந்து, பாசி போன்றவை திறந்த வெளியில் காய்ப்பதால் அவை மழையில் நனைந்து மக்கும் நிலைக்கு சென்று விட்டது. ஒரு குவிண்டால் ரூ 2400 க்கு விற்பனையான வெள்ளைச் சோளம் தரம் குறைந்ததால் தற்போது ஒரு 2000-க்கும் குறைவாகவே வியாபாரிகள் கேட்கின்றனர். 40 கிலோ கொண்ட ஒரு பை கொத்தமல்லி கடந்த ஆண்டு ரூபாய் 5500 வரை விற்பனையானது. தற்போது மழையால் அவை கருத்துப் போய் மனமும் சுவையும் மாறிவிட்டதால் 3500 விலையை வியாபாரிகள் கேட்பதாக கூறும் இவர் விவசாயிகள் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளதாக கூறுகிறார்.


பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி கடந்த 20 நாட்களுக்கு முன்பு முடிந்து விட்டதாக கூறும் இவர், இதனால் தற்போதைய இந்த பாதிப்பு அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு மாநில அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு அவர்களுக்குரிய இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு டெல்டா மாவட்டம் மட்டுமல்ல மானாவாரி பயிர்களும் பாதிக்கப்பட்டன.எனவே அறுவடை நேரத்தில் பாதிக்கப்பட்ட மானாவாரி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.