தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், சுமார் 1.20 லட்சம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயலுக்கு பிறகு, தென்னை சார்ந்த தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தேங்காய் விலை மிகப் பெரிய சரிவால், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மிக பெரியளவில் பாதிக்கப்பட்டது. தற்போது, ஒரு தேங்காய் வெறும் 8 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகளுக்கான பிரச்சனைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கவும், தேங்காய் எண்ணெய் மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பேராவூரணியில் ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் - தென்னை விவசாயிகள் கோரிக்கை
என்.நாகராஜன் | 24 Jul 2023 05:09 PM (IST)
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.
தென்னை விவசாயிகள்
Published at: 24 Jul 2023 05:06 PM (IST)