சாப்பிடும் உணவே நஞ்சாக மாறும் தற்போதைய சூழலில் நமது பாரம்பரிய இயற்கை விவசாய மீதான ஆர்வமும் நஞ்சு இல்லா உணவு பொருட்கள் மீதான தேடலும் அதிகரித்து வருகிறது.


இயற்கை முறையில் விளைவிக்கப்படும் ஆர்கானிக் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.




தர்மபுரி மாவட்டத்தில் பி ஜி எஸ் திட்டத்தின் கீழ் 400 ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்கள் 55 ஆயிரம் லிட்டர் வழங்க இலக்கு நிர்ணயித்து இதுவரை 27 ஆயிரத்து 786 லிட்டர் வழங்கப்பட்டுள்ளது. 


சாப்பிடும் உணவே நஞ்சாக மாறும் தற்போதைய சூழலில் நமது பாரம்பரிய இயற்கை விவசாய மீதான ஆர்வமும் நெஞ்சில்லா உணவுப்பொருட்கள் மீதான தேடலும் அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் ஆர்கானிக் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


 எனினும் இயற்கை விவசாயத்திற்கு அரசு வழங்கும் உதவிகள் தொடர்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை 


சர்வதேச அளவில் இயற்கை விவசாயம் மீதான கவனம் அதிகரித்து வரும் சூழலில் ஒன்றிய மாநில அரசுகளும் இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 


இந்தியாவில் சுமார் 15 லட்சம் ஏக்கரில் 11 லட்சம் விவசாயிகளால் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து விதமான உணவுப் பயிர்கள் காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை 2015 ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்து வருகின்றன. 


இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி கூறியதாவது:- 


தமிழகத்தில் பாரம்பரிய இயற்கை விவசாய இயற்கை வேளாண்மை ஊக்கப்படுத்த பிஜிஎஸ் என்ற திட்டத்தை திட்டத்தில் உள்ளூர் விவசாய குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, விருதுநகர் மாவட்டங்களில் குழுக்கள் தொடங்கப்பட்டு மானிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


 


தர்மபுரி மாவட்டத்தில் பி ஜி எஸ் திட்டத்தின் கீழ் 400 ஹெக்டர் நிலங்களில் இயற்கை விவசாயம்


 


 தர்மபுரி மாவட்டத்தில் பி ஜி எஸ் திட்டத்தின் கீழ் 400 ஹெக்டர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 20 குலுக்கல் அடங்கிய 52 விவசாயிகள் இதில் அடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை வேளாண் திட்டத்தில் சாமை, குதிரைவாலி, திணை, வரகு, ராகி மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மஞ்சள், வாழை, மிளகு, மா, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. 


விவசாயிகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி



இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வழங்குவதுடன் முன்னோடி விவசாயிகளின் வயல்களை நேரடியாக பார்வையிட ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் உள்ளூர் குழுவை பிஜிஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்தல், சங்கமாக பதிவு செய்தல், வங்கி கணக்கு தொடங்குதல், மண்புழு தயாரித்தல், உள்ளூர் திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவற்றுடன் அங்கக பொருட்காட்சியும் நடத்தப்படும். இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


55 ஆயிரம் லிட்டர் உயிர் உரங்கள் வழங்க இலக்கு


தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, பொட்டாஸ் மொபைலின் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024- 2025 ஆம் ஆண்டிற்கு 55 ஆயிரம் லிட்டர் எண்ணிக்கைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


 இதுவரை 1520 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 2786 லிட்டர் எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம் இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.