காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், உரிய தேதியான இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நிலை உருவாகியுள்ளது.

Continues below advertisement

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர்  திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் அணை  ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். இந்த  காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார்  16.50  லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும்.

 

Continues below advertisement

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12-ம் தேதியன்று 20 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக  11 முறை திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால்  நடப்பாண்டுடன் சேர்த்து 62 ஆண்டுகள் காலதாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 79.62 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும் பட்சத்தில், நீர்வரத்தும் திருப்திகரமாக இருக்கும் நிலையில்தான் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிலை உருவாகும். உரிய தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Also Read| DMK ELECTION RESULT: திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் இது தான்.! பட்டியலிட்ட குழு - சாட்டையை சுழற்ற தயாராகும் ஸ்டாலின்

அதிமுக, திமுக கண்டனம்

சொன்ன தேதிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாதால் விவசாயிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் ரூ.134.83 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். ஆனால், இது ஏமாற்று அறிவிப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா? கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரை கொண்டு வருவாரா? ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல் குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சி முதலமைச்சர், காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.