டெல்டா மாவட்டத்தின் கடைகோடி மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் இருந்து வருகிறது. இங்கு மீன் பிடி தொழிலும், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இப்பகுதி மக்கள் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெல் பருத்தி மற்றும் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகளவு பொங்கல் கரும்பு சுமார் 100 ஏக்கரில் ஐந்து லட்சம் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரும்பு நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பலத்த காற்று மற்றும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் வயலில் சாய்ந்தும், மழைநீர் வயல்களில் சூழ்ந்ததால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆட்கள் சம்பளம், உரங்களின் விலை உயர்வு என ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்த நிலையில், சாய்ந்த கரும்புகளை தூக்கி நிறுத்தி கட்டுவதற்கு ஏக்கருக்கு ரூபாய் முப்பதாயிரம் வரை கூடுதல் செலவு செய்து கரும்பை பாதுகாத்து வைத்துள்ளனர்.
இந்த சூழலில் தங்களுக்கு அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கொள்முதல் செய்யும் கரும்பை இடைதரகர்கள் மூலமாக கொள்முதல் செய்யாமல் அரசு நேரடியாக கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொங்கல் கரும்பு விவசாயிகளுக்கு அரசு எவ்வித கடன்களும், காப்பீடு செய்வதற்கு வழி இல்லாமல் தவித்து வருவதாகவும், வரும் காலங்களில் அரசு மற்ற விவசாயத்தை போல அதற்குரிய மானியத்துடன் கூடிய விதை கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு இழப்பீட்டை உடனடியாக தமிழக அரசுஅறிவிக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் ரவி வேண்டுகோள்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி தாலுகா விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 6 மணிநேரத்தில் 44 செ.மீட்டருக்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் சீர்காழி தாலுகாவில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில்மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் வெள்ளபாதிப்புகளை பார்வையிட்டு சென்று, குடும்ப அட்டைகளுக்கு மட்டும் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளுக்கு தலா ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் நெற்பயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகை இதுவரை அறிவிக்கவில்லை, இதனை உடன் அறிவிக்க வேண்டும். தண்ணீர்வடிந்து பயிர்கள் உரமிட்டு பச்சைபிடித்து வளர்ந்தாலும் பெரிய அளவில் மகசூல் எதுவும் கிடைக்காது எனவே 100 சதவிதகம் பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை பெற்றுதர வேண்டும். சீர்காழி தாலுகாவை பேரிடல் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.