குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். இதில் 30% மக்காச்சோளம் சாகுபடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுத்தது. இதற்கு பராமரிப்பு பணி சுலபமாகும்.

Continues below advertisement


இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி எனப்படும் அமெரிக்கன்படைப்புழு பயிர் முளைத்து இருபத்தைந்தாவது நாளில் குருத்துப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தண்டுப் பகுதியை முழுவதும் அழித்து தின்று விடுகிறது.இதனால் குருத்துப்பூச்சியை அழிக்க இருபத்தைந்து மற்றும் நாற்பதாவது நாளில் விலை உயர்ந்தமருந்து தெளிக்க வேண்டி உள்ளது. தவிர இரண்டு முறை களைபறிக்க வேண்டி உள்ளது. களை பறிக்க, மருந்து தெளிக்க, ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுவதால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என விவசாயிகள் சிரமப்பட வேண்டி உள்ளது விளைவித்த மக்காச்சோளம் மகசூல் விலையும் சீராக இருப்பதில்லை. அரசும் குறைந்த ஆதார விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பயிர் சாகுபடி தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


இந்நிலையில் தோட்டப் பாசன விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு  மாற்றாக இந்தாண்டு பப்பாளி சாகுபடிக்கு மாறிவருகின்றனர். தவிர பப்பாளி சாகுபடி மற்றும் பராமரிப்பு சுலபம் என்பதால் சில கிராமங்களில் பப்பாளி சாகுபடி செயள்ளனர்.ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடுகின்றனர். பப்பாளி பத்தாவது மாதம் காய்ப்புக்கு வந்துவிடுகிறது. ஒரு மரத்தில் ஐம்பது பப்பாளிபழம் வரை காய்க்கிறது. பொதுவாக பப்பாளி என்பது அன்றாடம் உண்ணக்கூடிய பழமாகும்.


இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, புதிய வகை பப்பாளி விளைந்த காய் பருவத்தில் அதன்தோள்மீது பிளேடால் கீறி விட்டு அதில் சுரக்கும் பால் போன்ற நீரை பாத்திரத்தில் பிடித்து கேனில் நிரப்புகின்றனர். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வரை அந்நீர் கிடைக்கிறது. அதை பாடம் செய்து பல்வேறு மருத்துவகுணம் மிக்க மாரடைப்பு, எலும்பு முறிவு, சர்க்கரை நோய், நீர், வாதம் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த மாத்திரைகள், டானிக், பொடி தயாரிக்கப் பயன்படுகிறது. தவிர முககிரீம், கேசரி பவுடர், கேக் பவுடர் என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.


இம்மரம் நான்கு ஆண்டுகள் வரை காய்த்து கொண்டிருக்கும். பத்தாவது மாதம் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளிவிட்டு பப்பாளியை கீறி அதன் நீரை  பாத்திரத்தில் பிடிக்கின்றனர்.ஏக்கருக்கு ஐம்பது கிலோ வரை கிடைக்கிறது. இதன் விலை கிலோ ரூபாய் நூற்று முப்பது விவசாயிகளிடம் விலைக்கு வாங்குகின்றனர். ஓரளவு கட்டுபடியாகக் கூடியதாகும்.தவிர பப்பாளி சாகுபடிக்கு குறைந்த வேலை ஆட்களே போதுமானதாகும். இதனால் முதற்கட்டமாக தோட்ட பாசன விவசாயிகளும் அதன் பின்னர் மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola