மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி ஊழல் ஊழல் என முழங்கியபடி விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாய சங்கத்தினரால் பரபரப்பு. விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Continues below advertisement

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா தலைமையில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை, வேளாண்துறை, கூட்டுறவுத்துறை பொதுப்பணித்துறை, மின்சார துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் மதுரை மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அப்துல் கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் பாலம் அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள்  நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ஊழல் என்று முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். மேலும் ஆவின் பால் பண்ணை முறைகேடு தொடர்பாக புகார் அளித்தால் புகார் அளிக்கும் பெண்ணுக்கு லாரி ஏற்றி கொன்று விடுவதாக மிரட்டல் வருவதாக கூறினர். இதனை தொடர்ந்து  நீர்வளத் துறையில் ஊழல் நடைபெறுவதை கண்டித்து தாங்கள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து  ஊழல் ஊழல் நீர்வளத் துறையில் ஊழல் என்று முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கம் இது குறித்து பேசிய அப்துல் கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவர் ஆபேல்...," மதுரை  திருமங்கலம்  மற்றும் நிலையூர் பிரதான கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் நீர்வளத்துறை பாலம் அமைக்கும் பணிகளில் ஊழல் நடைபெறுவதாக புகார் அளித்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மாவட்டம் ஏற்குடி - அச்சம்பத்து பகுதியில்  நீர் வழி வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய ஷட்டர்களுக்கு பெயிண்ட் அடித்து சிமெண்ட் கூலை ஊற்றியும் பணிநடந்து முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் துப்பாக்கி எடுத்து சுடவா முடியும் என விவசாயிகளிடம் கேள்வி எழுப்பியதாக குற்றம்சாட்டினர் எனவே அதிகாரிகள் மீது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எனவே மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் கண்மாய், ஓடை வரத்து கால்வாய்களில் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். மேலும் ஆவின்பால் முறைகேடு தொடர்பாக புகாரளித்தால் பால் பண்ணை உரிமையாளர்கள் மூலமாக கொலை மிரட்டல் வருகிறது" என பெண் விவசாயி தெரிவித்தார்.