விபரங்கள் அறிய மின்னஞ்சல் முகவரி aavinmadurai1@gmail.com மற்றும் 9486460470 என்ற தொலைப்பேசி எண் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சராசரியாக 1.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 636 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 1.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களின் கறவையினங்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தற்போது மருத்துவ வசதி உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கே சென்று கால்நடை மருத்துவச்சிகிச்சை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேரடியாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்
தற்போது, இரண்டு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் 11.06.2026-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு மதுரை சிவகங்கை மெயின் ரோடு, சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள A-1301 மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் (மதுரை ஆவின்) என்ற முகவரியில் நேரடியாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் என பொது மேலளாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் விபரங்கள் அறிய மின்னஞ்சல் முகவரி aavinmadurai1@gmail.com மற்றும் 9486460470 என்ற தொலைப்பேசி எண் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
