கொடைக்கானலில் மீண்டும் புத்துயிர் பெறும் மலை நெல் சாகுபடி.. பாரம்பரிய நெல்லின் பலன் விபரம் இதோ
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மலை கிராம மக்கள் மலை நெல் சாகுபடியை பிரதான தொழிலாக பல ஏக்கர் பரப்பளவில் செய்து வந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.கொடைக்கானல் சுற்றுலா தலமாக இருந்தாலும் அங்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
Just In
இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மலை கிராம மக்கள் மலை நெல் சாகுபடியை பிரதான தொழிலாக பல ஏக்கர் பரப்பளவில் செய்து வந்துள்ளனர். அறுவடை செய்த மலை நெல்லையே தங்களது உணவுத் தேவைகளுக்கும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் மலைநெல் விவசாயம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சிறிதுசிறிதாக கைவிடப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டதாக மேல்மலை கிராம மக்கள் கூறுகின்றனர். மலை நெல் விதைத்த காலத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்துதான் அறுவடை செய்யமுடியும், அதனால் இந்த மலை நெல் சாகுபடியை செய்வதில்லை எனவும் கூறுகின்றனர்.
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
விவசாயத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுவதனாலும் அறுவடைக்கு மிக காலதாமதம் ஏற்படுவதாலும் இந்த மலை நெல் விவசாயத்தில் மலை கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அழிந்துவரும் இந்த மலை நெல் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது அப்பகுதியில் உள்ள இளைய தலைமுறை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவும் அதிக சத்துக்கள் நிறைந்து இருந்ததால் இந்த அரிசியை முன்னோர்கள் தங்களது முக்கிய உணவாக பயன்படுத்தியதால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
மேலும் காலம் காலமாக சடங்கு சம்பிரதாயம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு இந்த மலை நெல்லை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மலை நெல் விவசாயத்தை மீட்டெடுக்க முதற்கட்டமாக மன்னவனூர் கிராமத்தில் உள்ள கும்பூர் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் இந்த நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மலை நெல்லுக்கு இயற்கை உரமான மாட்டின் சாணத்தை மட்டுமே உரமாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இந்த மலை நெல்மணிகள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் இந்த மலை நெல் சாகுபடியை அதிகரிக்கும் விதமாகவும், மலை நெல்லை உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் இந்த மலை நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக மேல்மலை இளையதலைமுறை விவசாயிகள் கூறுகின்றனர்.