திருவாரூர் மாவட்டத்தில் ஏப்.7ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

ஆழி தேரோட்டத்தை ஒட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு ஏப்ரல் 7ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த தினத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்துக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

Continues below advertisement

 

மறுதேர்வு எப்போது?

 

அன்று ஆழி தேரோட்டம் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒத்தி வைக்கப்பட்ட தமிழ்ப் பாடத் தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  07.04.2025 அன்று தேர்வு தொடங்குகிறது. 17.04.2025 வரை தேர்வுகள்‌ நடைபெறும்‌ என தொடக்கக்‌ கல்வி இயக்குநரகம்‌ தெரிவித்துள்ளது. வெயில் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க உள்ளன. 

 

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?

 

அதே நேரத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வுகளை 4,113 மையங்களில் உள்ள 9,13,084 பேர் எழுதுகின்றனர். இதில், 4.46 லட்சம் மாணவர்களும் 4.40 லட்சம் மாணவிகளும் அடக்கம். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித் தேர்வர்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் உள்ளனர்.

 

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஏப்.7ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த நாள் நடைபெறுகிறது.