கரூர் மாவட்ட காவிரி பாசனம் பகுதிகளில் ஆள் பற்றாக்குறையால் வட மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு நெல் நடவும் பணியில் ஈடுபடும் தமிழக விவசாயிகள், விவசாய நாட்களில்100 நாள் வேலை திட்டத்திற்கு பெண்கள் செல்வதால் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்திலிருந்து ஆண்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.





கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாசன பகுதிகளில் சம்பா சாகுபடி நெல் நடவு பணி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடி விறு, விறுப்பாக நடக்கிறது. இதில் இந்த ஆண்டு 14,000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 1000 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து சாகுபடி பரப்பு இலக்கை நோக்கி செல்லும் என வேளாண் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.




இந்த ஆண்டு பாசன வாய்க்காலில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மாயனூர், பணிக்கம்பட்டி, லாலாபேட்டை உள்ளிட்ட  பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நடவு முறையில் பயிர் சாகுபடி நடப்பதால் அதிகளவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். 




மேலும் நாற்றங்கால் பறிப்பு, கட்டுதால், நடவு ஆகிய பணிக்குள் உள்ளூர் பணியாளர்களை ஈடுபடுத்தினால் ஒரு ஏக்கருக்கு செலவு கூடுதல் ஆகும். அதேபோல தற்போது 100 நாள் வேலை திட்டம் நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள பெண்கள் விவசாய  பணிக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  




ஆட்கள் பற்றாக்குறையால் ஒரிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண் தொழிலாளர்களை வரவழைத்து நாட்டு நடவும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் குழுவாக செயல்பட்டு காண்ட்ராக்ட் முறையில் ஏக்கருக்கு 4000 முதல் 5000 ரூபாய் வரை பெற்று கொண்டு  நாட்டு நடவும் பணியில் ஈடுபடுகின்றனர். வரிசை முறை என்ற தொழில் நுட்பத்தில் நடவு பணியை செய்வதால் ஏக்கருக்கு நெல் நாற்றுமுடி குறைந்த அளவு ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றன.