தஞ்சாவூர்: நீல பச்சை பாசி... நெல்லுக்கு நல்ல ராசி... ஏக்கருக்கு 10 கிலோ பாசி. நட்ட 10 நாளில் போட யோசி என்று விவசாயிகளுக்கு நல்ல யோசனை வழங்குகிறார் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா. நீல பச்சை பாசி நெல்லுக்கு சிறந்த நன்மைகள் அளிக்கும். நீலப்பச்சைப்பாசி என்பது நீர் தேங்கிய நிலையில் உள்ள இடங்களிலும், சூரிய ஒளி நன்கு படக்கூடிய இடங்களிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இவை நீர் நிலைகளிலும், நெல் வயல்களிலும் களையாக வளரக்கூடிய சாதாரண பச்சைப்பாசி போல் அல்லாமல் இவை கருநீலம் கலந்த பச்சை நிறம் கொண்டிருக்கும். பச்சைப்பாசி போல் நெருக்கமான நார் போன்ற அமைப்பு இல்லாமல் வழுவழுப்பான தோற்றம் கொண்டவை. இவை பொதுவாக காலை நேரங்களில் மண்ணில் படிந்தும் வெயில் அதிகமாக உள்ள மதிய வேளைகளில் நீரின் மேல் மிதந்தும் காணப்படுகின்றன. நீலப்பச்சைப்பாசி நல்ல சூரிய ஒளி உள்ள நீர்நிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறுவை மற்றும் நவரைப் பட்டங்களில் நெற்பயிருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. களிமண் கலந்த மண் வகைகளில் இந்த பாசியின் வளர்ச்சி அதிகமாகவும். செம்மண் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் வளர்ச்சி குறைந்தும் காணப்படும் நடுநிலை முதல் அதிக காரத்தன்மை உள்ள இடங்களில் வளர்ச்சி அதிகரித்தும், அதிக அமில நிலையில் வளர்ச்சி குறைந்தும் காணப்படும்.
நெல்லுக்கு நல்ல ராசி... நீல பச்சை பாசி - தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்
என்.நாகராஜன் | 23 Mar 2023 03:10 PM (IST)
நீலப்பச்சைப்பாசி நல்ல சூரிய ஒளி உள்ள நீர்நிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறுவை மற்றும் நவரைப் பட்டங்களில் நெற்பயிருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது.
நீலபச்சை பாசி
Published at: 23 Mar 2023 03:10 PM (IST)