தமிழக கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
தற்போது பருவமழை குறைவால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக புரட்டாசி மாதங்களில் இப்பகுதியில் பருவ மழை இருக்கும். ஆனால் தற்போது மழையின்று பருவ நிலை மாறியுள்ளது. இந்த நிலையில் கம்பம் , சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக சாகுபடி நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ICC T20 vs IPL: காசு..பணம்..! துட்டு..மணி..! உலககோப்பையை ஓரம் கட்டும் ஐ.பி.எல் பரிசுத்தொகை..!
கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். வருடத்தில் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடி செய்யப்பட்டு 3 மாதங்களில் முதல்போக நெல் விவசாயத்திற்கான அறுவடை பணிகள் முடியும் நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நாத்து நடுதல் பணிகள் நடைபெறும்.
இந்த நிலையில் தற்போது முதல் போக சகுபடிக்கான நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனுர், சாமாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல் போக நெல் அறுவடை பணிகள் முடிந்தவுடன் இரண்டாம் போக நெல் நடவுக்கான நாத்து நடுதல் போன்ற பணிகளில் அடுத்த மாதம் இறுதியில் விவசயிகள் ஈடுபடுவர்.
முதல் போக நெல் அறுவடை பணியில் ஈடுபடும் விவசாயிகள் கூறுகையில், தற்போது இருக்கும் கால சூழல் விலைவாசி ஏற்றம் போன்ற காரணங்களால் நெல் விவசாயம் செய்வதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அறுவடை செய்த நெல் மூடைக்கு தற்போது 1200 ருபாய் வரை மட்டுமே விற்பனையாவதாகவும், தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்காத சூழலே ஏற்பட்டுள்ளது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். இன்றைய விலைவாசிக்கு ஏற்ற சூழலில் மூடைக்கு நெல் 1500 ருபாய்க்கு மேல் விற்றால் மட்டுமே தங்களுக்கு போதிய அளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.