திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் விவசாயிகள் தங்கள் விலைநிலத்தில் பயிரிட்ட நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு ‌எடுத்து வருவார்கள் அப்போது விவசாயிகளின் நெல் மூட்டை எடைபோடுவதற்கு 50 ரூபாய் வீதம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் மற்றும் விவசாயிகள் அல்லாத இடைத்தரகர் எடுத்துவரும் நெல் மூட்டைக்கு எடுத்து கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாய்கள் குறை தீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு கள் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 


மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்திகுறிப்பில், 


”திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வரையில் உள்ள பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட முழுவதும் 63 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் tncsc-edpc.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஒளிவுமறைவற்ற முறையில் விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.




ஆனால், ஒரு சில நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் இலலாதவர்களிடம் நெல் கொள்முதல் செய்தும், அனுமதி ஆணையின்றி நெல் கொள்முதல் செய்தல், இணையதளம் மூலமாக அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிக அளவில் கொள்முதல் செய்தல். நெல் கொள்முதல் செய்யும் போது அரசால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத தவறுகளில் உள்ளிட்ட குறைபாடுகள் காணப்பட்டது.இதனை தவிர்ப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்,மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றி வேல், வட்டாட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் இதர பணியாளர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து திடீர் ஆய்வுகள் செய்து வந்தனர். ஏற்கனவே, இந்த ஆய்வுகளின் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக 12 பட்டியல் எழுத்தர்கள் (Bill Collector) நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது.




 


”இதே போன்று குற்றச்சாட்டுகளுக்காக மேலும் 10 பட்டியல் எழுத்தர்கள் (Bill Collector) இன்று (02.05.2022) நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக மாவட்டத்தில் மொத்தம் 22 பட்டியல் எழுத்தர்கள் (Bill Collector) இன்று நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தவறான முறையில் பயன்பெற முயற்சிக்கும் நபர்கள், விவசாயிகள் அல்லாதோர் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யவும் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இதுபோன்ற தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்வதுடன் காவல் துறை மூலமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்” - இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் கூறியிறுந்தது.