" செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனடியாக கோமாரி தடுப்பூசி, செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே தடுப்பூசியை போட்டு முடிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வரப்போர் கோரிக்கை வைத்துள்ளன

 

கால்நடைகள் நிறைந்த மாவட்டம்

 

செங்கல்பட்டு மாவட்டத்தில்,  2 லட்சத்து 60 ஆயிரத்து 256 கால்நடைகள் உள்ளன. எருமை மாடுகள்  22 ,232,  வெள்ள ஆடு எண்ணிக்கை,  1 லட்சத்து 38 ஆயிரத்து 410,  ஆடுகளின் எண்ணிக்கை  63 ஆயிரத்து 719  உள்ளதாக மாவட்ட கால்நடை துறை தகவல் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் போடவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.''

 

 


மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )


 

முக்கிய வாழ்வாதாரம்

 

செங்கல்பட்டு மாவட்டமானது  தொழில் துறையில் வளர்ச்சி அடைந்து வந்தாலும்,  விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மிகப் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட கால்நடை வளர்ப்பதை தங்களுடைய பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர்.  கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை,  உயர்த்தி வருகிறது எனவும் கூறலாம்.  அந்த அளவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் கால்நடைகளை சார்ந்து இருந்து வருகிறது.

 


மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )


 

100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி

 

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு இரண்டு முறை  மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  செப்டம்பர் மாதத்தில்  செலுத்தும் கோமாரி நோய் தடுப்பூசி ஆனது  பருவமழையை கணக்கில் கொண்டு செலுத்தப்படுகிறது.



 

உயிர் இழக்கும் அபாயம்

 

கோமாரி நோய் என்பது கால்களில்  வரக்கூடிய மோசமான நோய் இதன் காரணமாக மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.   தொற்று நோயாகும் இருப்பதால்,  அதை  தடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நோய் அதிக அளவு பரவும் என்பதால் அதற்காக செப்டம்பர் மாதங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.  நோய் தொற்று உருவாகும் நேரத்தில் 21 நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கால்நடைகள் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் நடப்பாண்டு, இது குறித்து இதுவரை எந்த தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் , உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

விவசாயிகள் கோரிக்கை

 

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாய சங்க நலச் தலைவர் வெங்கடேசன்  தெரிவித்ததாவது : கடந்த சில ஆண்டு காலமாகவே தடுப்பூசி போடுவது தாமதமாகி கொண்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடைகளை கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

 

 இதுகுறித்து கால்நடை துறை இணை இயக்குனர்  தெரிவித்ததாவது : தற்சமயம் தோல் நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது விரைவில் கோமாரி நோய் தடுப்பூசியும் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.