தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் நடப்பு ராபி பருவம் கடைசி விதைப்பாக மருத்துவ குணம் கொண்ட கொத்தமல்லி கரிசல் நிலங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். 




கொத்தமல்லி இலை பல்வேறு நோய்களுக்கான நிவாரணியாகும். கொத்தமல்லி பயிரிட்ட நிலங்களை சுற்றிப் பார்த்து அதன்மூலிகை மனத்தை சுவாசித்தால் பித்தம், மூச்சுத்திணறல், சளி, வாதம், கல்லடைப்பு, நாட்பட்ட வாயுதொல்லை போன்ற பல்வேறு நோய்கள் குணமாகும். தவிர மல்லி விதையை பொடியாக்கி காபிக்கு பதிலாக வெந்நீரில் கலந்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். கொத்தமல்லி விதை மட்டுமே நாளது வரை ரக விதைகளாக உள்ளது. 


நாட்டு மல்லி, லயன் மல்லி என இருவகைகள் உண்டு. கொத்தமல்லி விதை பொன்னிறமாக இருக்கும். நாட்டு கொத்தமல்லி மிகவும் ஆரோக்கியமானதாகும். கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், விருதுநகர் மாவட்டங்களில் நாட்டுக் கொத்தமல்லி மட்டுமே பயிரிடப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஸ்டிரா, உத்திரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் லயன் கொத்தமல்லி அதிகமாக பயிட்டப்படுகிறது. 




லயன் கொத்தமல்லி பருவட்டாகவும, இங்கு விளைவிக்கப்படும் மல்லி சற்று சிறுத்தும் காணப்படும். கொத்தமல்லி செடி வளர்வதற்கு அதிக மழை தேவை இல்லை. கடும் குளிரில் வளரக் கூடியாதாகும் விதைப்பு செய்யப்பட்டு, பதினைந்து நாட்கள் கழித்துதான் முளைப்பு தெரியும். தற்போது நாற்பது நாட்களுக்கு மேலான செடி பூ பிடித்து காண்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மகசூல் காலம் நூறு நாட்களாகும். 




தோட்டக்கலை துறை செடியான கொத்தமல்லியை கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொத்தமல்லி பயிரிட்ட விவசாயிகளுக்கு கொத்தமல்லி விதை மற்றும் அதற்குண்டான. இயற்கை அடி உரம், மேலுரம் மற்றும். பூஞ்சாணம் நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பஞ்ச காவியம் எனப்படும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.