கேரள மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடந்த, 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு, 2,587 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி 2,718 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், அமராவதி ஆற்றில், 1,570 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 74.28 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை
கரூர் அருகே, மாயனூர் கதவனைக்கு, காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு, 11 ஆயிரத்து, 351 கன அடி தண்ணீர் வந்தது. குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 10 ஆயிரத்து, 731 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில், 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை:
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 34.18 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை:
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 6.10 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கரூர், அரவக்குறிச்சி, அனைபாளையம், கே.பரமத்தி, குளித்தலை, தோகைமலை, கே.ஆர். புறம், பஞ்சப்பட்டி, மாயனூர், கடவூர், பாலவிடுதி, மயிலம்பட்டிகளில் மழையளவு எதுவும் பதிவாகவில்லை.
கேரள மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் அளவு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலையின் அளவு பதிவாகாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்