ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்று ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸை வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் பின்னர் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி 57 ரன்களை குவித்தார் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 149 ரன்களை அடித்தது அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலே 26 ரன்களை குவித்தார் பின்னர் அடுத்த ஓவரிலேயே பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார் அதிரடி ஆட்டத்தை நிறுத்தாமல் ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன் அடித்தார் இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 13.1 ஓவரிலே 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது