உலக சுற்றுலா தினம் 2022 இன்று (27, செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது.



இது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது.



உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது



உலகத்தையும் அதன் சாராம்சங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை மக்களுக்குப் புரிய வைப்பதே இந்த நாளின் நோக்கம்.



இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. சுற்றுலா செல்வது யாருக்கு பிடிக்காது!



2022 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம் 42வது ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்த விழாவின் அதிகாரப்பூர்வ விழா நடைபெற உள்ளது.



2022 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்' என்பதாகும்.



ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அதன் பிம்பத்தை உயர்த்துவதிலும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



கண்டுபிடிப்பின் உண்மையான பயணம் புதிய நிலப்பரப்புகளைத் தேடுவதில் இல்லை, புதிய கண்களைக் கொண்டிருப்பதில் உள்ளது. - மார்செல் ப்ரோஸ்ட்.



நீங்கள் எங்கு சென்றாலும் அது எப்படியாவது உங்களுள் ஒரு பகுதியாக மாறிவிடும். - அனிதா தேசாய்.