உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம், ஊதா மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் ஆகும். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் மியாசாகி மாம்பழம் ரூ.2.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் விளைவிக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இந்த வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. பாதுகாவலுக்காக, நாய்கள் மரத்தின் அருகில் காவல் காக்கின்றன. தற்போது இது இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. சாதாரண மாம்பழங்களைவிட, இந்த மாம்பழங்கள் 15% அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. ஒரு மாம்பழம் 350 கிகி எடை இருக்கும். இதை விளைவிக்க அதிக உழைப்பு தேவைப்படுகிறது. இதனாலேயே இது விலை அதிகமாக விற்கப்படுகிறது. இது பழுத்தவுடன் ஊதா நிறத்தில் இருந்து அடர் சிவப்பு நிறமாக மாறும்.