ஜங்க் ஃபுட்... இதை தமிழில் அழகாக வைத்திருக்கிறார்கள் அதாவது குப்பை உணவு. ஜங்க்ஃபுட் என்னும் குப்பை உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வோமா? ஜங்க் ஃபுட் உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மயங்கி கிடக்கிறார்கள் ஜங்க் ஃபுட் சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை. மோனோசோடியம் குளூட்டோமைட் போன்றவை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுகின்றன. இதனால் செயற்கை சேர்த்த உணவுக்கு அடிமையாக கிடக்கிறோம் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ்,கார்பனேட்டட் குளிர்பானங்கள் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு,புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் எல்லாமே இந்த வகையை சார்ந்தவை தான். கெட்ட கொழுப்பு, அதிக கலோரிகள், மித மிஞ்சிய சர்க்கரை அதிகரித்த சுவை நிறைந்த பொருள்களை கலவையே ஜங்க்ஃ புட். எனவே இவற்றை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது