காதலில் திளைக்கும் பறவைகளில் இருவாச்சி பறவையும் ஒன்று..!



இரைத் தேடுவதில் தொடங்கி எங்குச் சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்லுமாம்..!



இப்பறவைகளின் கூடு அடர்வனங்களில் இருக்கும் மரப்பொந்துகள் தானாம்..!



ஆண் பறவை, பெண் பறவை இருக்கிற பொந்தை தன்னுடைய எச்சில், ஈரமான மண் மற்றும் மரச்சிதைவுகளைக் கொண்டு சிறு துவாரத்தினை விட்டு மூடி விடுமாம்..!



பெண் பறவை சிறகுகளை இழந்து, தன்னுடைய இயற்கைப் பொலிவை இழந்து வயிற்றில் முட்டையுடன் இனப்பெருக்கத்துக்குக் காத்திருக்குமாம்..!



இரை தேடி திரும்புகிற ஆண் பறவை தன் அலகுகளுக்குள் சேமித்து வைத்திருக்கிற உணவை அந்தக் கூட்டின் துவாரம் வழியாகப் பெண் பறவைக்கு ஊட்டிவிடுமாம்..!



முட்டையில் இருந்து குஞ்சிகள் வெளி வருகிற வரை தாய்ப்பறவைகளின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா..!



பறக்கும்போது ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருப்பதுடன் அதேபோல ஒலி எழுப்புமாம்..!



இந்த பறவை கேரளாவின் மாநில பறவையாகவும் உள்ளது..!



இந்த பறவைகள் சமீபத்தில் அந்தியூர் காடுகளில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..!