தி ஹாண்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுத்த வெப்சீரிஸ் இது ஹுயு, ஒலிவியா கிரெய்ன் மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகள் பற்றிய கதை அக்குடும்பம் நீண்ட காலம் அந்த வீட்டில் தங்க, அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க தொடர்கிறது இழப்பின் காரணமாக குடும்பம் வீட்டை விட்டு வெளியேறுகிறது மீண்டும் 26 வருடத்திற்கு பிறகு குடும்பம் ஒன்று சேர்கிறது போதைக்கு அடிமையான சகோதரன் பற்றி விசாரணை நடைபெறுகிறது லூக்கிற்கு நடந்தது என்ன? நெல் ஏன் ஸ்டீவன் வீட்டில் இருந்தார்? என்பது மிச்சக் கதை முழுக்க முழுக்க புத்தக கதையை அடிப்படையாக வைத்துக் கதை நகர்கிறது புத்தகத்தில் இருந்த சுவரஸ்யமான தருணங்களையும் இணைத்து இயக்கியிருப்பது பாரட்டப்பட வேண்டியது அக்குடும்பத்தில் என்னதான் ஆனது? என்ற சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது