தந்தை 144-வது பெரியாரின் பிறந்தநாள் இன்று




இவரது பொன்மொழிகள் சிலவற்றை காண்போம்



சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்



பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும்



சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி, சிந்திக்காதவான் மிருகம், சிந்திக்க பயப்படுகிறவன் கோழை



கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது



இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.



ஆடம்பர செலவு என்பது தரித்திரத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்



பெண்களைக் கூண்டுக்கிளி ஆக்காமல் தாரளமாக பழகவிட வேண்டும்



நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?



ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்



இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்



அறிவுள்ளவருக்கு அறிவின் செயல்; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்.