இந்திய கேப்டன்களில் தோனி பெருமை மிகு சாதனைகளைப் படத்தவர்..! இவரது தலைமையில் இந்திய அணி டி20 உலககோப்பை, 50 ஓவர் உலககோப்பையை வென்றுள்ளது..! ஐபிஎல்லில் சென்னை அணியை வழிநடத்தி 4 கோப்பைகளை வென்றிருக்கிறார்..! ஆட்டம் எவ்வளவு சீரியசாக சென்றாலும் மிகவும் ரிலாக்ஷாக விளையாடக்கூடியவர்..! வெற்றி தோல்வியை ஒரே மாதிரி அணுகக்கூடிய கேப்டன் என பெயர் பெற்றவர்..! அணியை மிகவும் வலுவாக மாற்றிவிட்டு தன்னுடைய ஒய்வை அறிவித்தவர்..! 2019 உலககோப்பையில் இவரது ரன்-அவுட் யாராலும் மறக்க முடியாது..! ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் ஸ்டெம்பை சேகரிப்பது இவரது வழக்கம்..! 2011 உலககோப்பை சிக்ஸரை இந்த உலகம் எப்போதும் மறக்காது..! 2020 ஆகஸ்ட் 15ல் From 19:29 hrs consider me as Retired என தான் கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்தார்..!