அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘ட்ரம்ப் மொபைல்’ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்.



இந்த போன் முற்றிலும் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. இந்த போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்குகிறது.



இந்த ஃபோனின் ஆரம்ப விலை 499 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐபோனுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.



பயனர்கள் இந்த அலைபேசியை 100 டாலர்கள் செலுத்தி தவணை முறையில் வாங்கலாம். இந்த அலைபேசி ஆகஸ்ட் மாதம் முதல் சந்தையில் கிடைக்கும்.



ட்ரம்ப் மொபைலில், 68 அங்குல AMOLED திரை வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன்(Refresh Rate) வருகிறது.



இந்த போன் 50MP பிரதான கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமராவுடன் வருகிறது. மேலும் இதில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது



இந்த போன் 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15, 12GB RAM, 256GB மெமரியுடன் வருகிறது. இதன் மெமரியை நீங்கள் அதிகரித்துக்கொள்ளலாம்.



ட்ரம்ப் போன், பாதுகாப்புக்காக கைரேகை ஸ்கேனர் மற்றும் AI அடிப்படையிலான முக அன்லாக் போன்ற நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.



இந்த ஃபோனுடன் மாதத்திற்கு 4,745 டாலர்கள் கொண்ட சேவை திட்டமும் கிடைக்கும். இதில் வரம்பற்ற அழைப்புகள், குறுஞ்செய்திகள், டேட்டா, டெலிஹெல்த் மற்றும் சர்வதேச அழைப்புகளும் அடங்கும்.



ட்ரம்ப் நிறுவனம் 24/7 வாடிக்கையாளர் ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர் உதவிக்காக உண்மையான மனித பணியாளர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.