17வது சீசன் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின



ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது



முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை குவித்தது



ஹைதராபாத் அணிக்கு ஹென்றிச் க்ளாசன் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் குவித்திருந்தனர்



அதன் பின்னர் 278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது



மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்



அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய மும்பை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்



இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் மட்டுமே சேர்த்தது



இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்



இந்த போட்டியில் 63 ரன்களை குவித்த ஹைதராபாத் அணியின் இளம்வீரர் அபிஷேக் ஷர்மா, ஆட்டநாயகன் விருதை பெற்றார்