இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் நவ்தீப் சைனி



ஹரியானாவை சேர்ந்த இவர், ஐ.பி.எலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்



மேலும் டொமெஸ்டிக் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்



தொடர் காயங்கள் காரணமாக இவர் இந்திய அணியில் சமீப காலமாக விளையாடவில்லை



நவ்தீப் சைனி, ஸ்வாதி அஸ்தானா என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது



ஸ்வாதி அஸ்தானா இன்ஸ்டாகிராம் இன்ஃப்லுவென்சர் ஆவார்



இந்நிலையில் இந்த காதல் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது



இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது



தற்போது புதுமண தம்பதி தங்கள் மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது