மகாராஷ்டிராவின் என்சிபி தலைவர் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தனி விமான விபத்தில் காலமானார்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

பாராமதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது, இதில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

அஜித் பவார் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக மும்பையிலிருந்து தனியார் விமானம் மூலம் புறப்பட்டார்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

விமானம் தரையிறங்க முயன்றபோது இயந்திர கோளாறு காரணமாக பாராமதியில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குப் பிறகு எரிபொருள் டேங்கிங் வெடிப்பு ஏற்பட்டது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

டிஜிசிஏ தகவலின்படி இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்தனர் அவர்களில் விமானி மற்றும் சக ஊழியர்களும் அடங்குவர்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

விமானம் மும்பையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு பாராமதிக்கு அருகில் காலை சரியாக 8.44 மணிக்கு விபத்தில் சிக்கியது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதறிய பாகங்கள் சம்பவ இடத்தின் பல பகுதிகளில் சிதறிக்கிடந்தன.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: abplive

விமானத்தில் பயணித்தவர்கள் உடல் கருகிய நிலையில், அஜித்பவார் கையில் கட்டியிருந்த வாட்ச் மூலம் அடையாளம் காணப்பட்டது

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: abplive

விமானம் தரையிறக்கும் போது தெளிவான வானிலை இல்லையென விமானி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

விமான விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது- விசாரணையின் இறுதியில் விபத்திற்கான காரணங்கள் தெரியவரும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: abplive