இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வெஸ்ட் இண்டீஸ்கு சென்றுள்ளது



இதன் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது



இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையினால் சமனில் முடிந்தது



இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 76 வது சதத்தை அடித்தார் விராட் கோலி



ஒருநாள் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது



இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



முக்கியமாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



பல நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு முக்கியமான போட்டியாகும்



அதுபோல் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷிம்ரோன் ஹெட்மியர் நீண்ட நாட்களுக்கு பின் விளையாட வந்துள்ளார்



இன்றைய ஆட்டம் டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் விறு விறுப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது