செம்பருத்தி பூ கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும், பளபளப்பையும் கொடுக்கிறது. ஆரோக்கியமான தலைமுடிக்கு செம்பருத்தி ஹேர் பேக் வீட்டிலேயே செய்து ஹெல்தி முடிக்கு ஹலோ சொல்லலாம்.. தேவையான அளவு செம்பருத்தி பூ , செம்பருத்தி இலை எடுத்து கொள்ளவும். பிரெஷாக பறித்த சில செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பூ இதழ்களை பிரித்து இதழ் மற்றும் இலைகளை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்கவும். செம்பருத்தி பேஸ்டை தலைமுடி வேரில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளுங்கள். பின்னர், தலைமுடியை கட்டி சுமார் 30- 40 நிமிடங்கள் பேக் உடன் வைக்க வேண்டும். இயற்கையாக ஹேர் பேக் போடும் நாளில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். தண்ணீரில் அலசினாலே போதும். வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ச்சியாக செய்தால் உங்கள் கூந்ததில் ஏற்படும் மாற்றத்தைக் காண முடியும்.