2 வாரத்துக்கு தினமும் முட்டை சாப்டுங்க; இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

முட்டைகளில் புரதம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பசி சீக்கிரம் எடுக்காது.

தினமும் முட்டை சாப்பிடுவதால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

முட்டையில் உள்ள வைட்டமின் B12 மற்றும் கோலின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி.. கவனத்தை அதிகரிக்கும்.

கண் ஆரோக்கியத்திற்கு முட்டைகள் நல்லது. இதில் உள்ள லுடீன், ஜியாக்ஸாந்தின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கண் பிரச்சனைகளை குறைக்கும்.

முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும்.

முட்டைகளில் பயோடின் இருப்பதால், முடி மற்றும் நகங்கள் வலுவடைய உதவுகிறது.

காலை உணவாக முட்டை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு நீண்ட நேரம் இருக்கும். இதனால் ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் குறையும்.

முட்டையில் உள்ள வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவதற்கு இது உதவுகிறது.

அதிகமாக எண்ணெயில் பொரித்த முட்டைகளை சாப்பிட்டால் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம்.

சிறுநீரக பிரச்சனைகள், இதய நோய்கள் அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் தினமும் முட்டை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.