மழைக்காலத்தில் வைட்டமின் D குறைபாடு வராமல் இருக்க இவற்றை சாப்பிடுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் வைட்டமின் டி-க்கு சிறந்த இயற்கை ஆதாரங்கள் இவற்றை வாரத்திற்கு 2, 3 முறை எடுத்துக்கொள்வது நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் D உள்ளது. தினமும் அல்லது வாரத்தில் சில நாட்கள் முட்டைகளை சாப்பிடுவது நல்லது.

சில தாவர அடிப்படையிலான பால்களில் வைட்டமின் D கூடுதலாக சேர்க்கப்படுகிறது. வாங்குவதற்கு முன் லேபிளை சரிபார்த்துக்கொள்ளவும்

காளான்களில் வைட்டமின் D ஓரளவுக்கு இருக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு இவை ஒரு நல்ல தேர்வு.

சில ஓட்ஸ் மற்றும் தானியங்களில் வைட்டமின் D சேர்க்கப்படுகிறது. அவற்றை பால் அல்லது தயிருடன் கலந்து உட்கொண்டால் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும்.

மேகங்கள் இருந்தாலும் கூட ஓரளவுக்கு புற ஊதா கதிர்கள் இருக்கும் .வானிலை சாதகமாக இருந்தால் காலை அல்லது மாலை கொஞ்ச நேரம் வெளியே இருங்கள்.

வைட்டமின் D உறிஞ்சப்படுவதற்கு கால்சியம் அவசியம். அதனால்தான் பால், தயிர், எள், கீரைகள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

மீன், முட்டை, பருப்பு, கொண்டைக்கடலை, கோழி போன்ற புரத உணவுகள் எலும்புகள் தசைகளின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன

அடிக்கடி சோர்வு, எலும்பு வலி, தசை பலவீனம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வைட்டமின் D குறைபாடு இருக்கலாம்

விட்ட்மின் D சப்ளிமென்ட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.