உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா? அப்படியென்றால் இந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உப்பு அதிகமாக உள்ள சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் போன்றவை உடனடியாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

பொட்டல உணவுகள் மற்றும் தயார் நிலையில் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் சோடியம் மற்றும் பதப்படுத்திகள் அதிகமாக இருக்கும். இவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

பர்கர்கள், பீட்ஸாக்கள், வறுத்த உணவுகள்.. டிரான்ஸ் கொழுப்புகள் காரணமாக இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கும்.

பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன.

கேக்குகள், பேக்கரி நொறுக்குகள், இனிப்புகளை அதிகமாக சாப்பிட்டால்.. பிபி, எடை இரண்டும் அதிகரிக்கும்.

காபி அதிகமாக குடிப்பதால் காஃபின் அதிகரிக்கும். இது தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

உடனடி நூடுல்ஸில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. இது ரத்த அழுத்தத்திற்கு தீங்கு விளைவிக்கும்

மது அருந்தினால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குறைந்த சோடியம் உணவைப் பின்பற்ற வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக புதிய காய்கறிகள், பழங்கள், முழு உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.