ஆத்தாடி.. இதெல்லாம் மூளை பக்கவாத அறிகுறிகளா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மூளை பக்கவாதம் என்பது மோசமான பாதிப்பாகும். இது உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதாகும்

அதை முன்கூட்டியே கண்டறிந்தால் பக்கவாதத்தின் தீவிரத்தை தவிர்க்கலாம்.

மூளை பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் என சொல்லப்படுகிறது

கை, கால்களில் அதிகப்படியான உதறல் அல்லது பேசுவதில் சிரமம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்

மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது அல்லது குறையும்போது பக்கவாதம் ஏற்படுகிறது

இது மூளை செல்களுக்கு சேதம் விளைவிக்கலாம். மூளையின் செயல்பாட்டை குறைக்கலாம்.

முகம். கை அல்லது கால் மரத்துப்போதல், கடுமையான தலைவலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்

பார்வை குறைதல், தெளிவற்ற பார்வை, தலைச்சுற்றல், தூக்கமின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இதனை தடுக்க குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு, அதிக நார்சத்து உள்ள உணவை உண்ணுங்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.