இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்பீரித்கவுர் தேர்வு ஸ்மிரிதி மந்தனா மற்றும் நிகர் சுல்தானா ஆகியோருடன் போட்டியிட்டு வெற்றியாளராக வருவதை தாழ்மையுடன் ஏற்கிறேன் என்றார். ஹர்மன்பிரீத் கவுர் 124 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும், 17 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 322 ரன்கள் எடுத்துள்ளார். 135 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் மற்றும் 8 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 647 ரன்கள் விளாசியுள்ளார். ஹர்மன்பிரீத்கவுர் டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்மன்பிரீத்கவுரின் ஜெர்சி நெம்பர் 7. ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.