2024 ஐபிஎல் சீசனில் மாஸ் காட்டி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! ஐபிஎல் 2024 சீசனில், விளையாடிய எட்டு ஆட்டங்களில் 5 வெற்றிகளை குவித்துள்ளது ஹைதராபாத் அணி ஒரே சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது மற்ற சீசனை விட இந்த சீசனில் ஹைதராபாத் அணியின், பேட்டிங் வரிசை மிகவும் சிறப்பாக உள்ளது தொடக்க வீரர்கள் ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர் முதல் 5 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது கடந்த ஆண்டு வரை, அதிகபட்சமாக பெங்களூர் அணி 263 ரன்களை எடுத்து முதல் இடத்தில் இருந்தது இந்த ஆண்டு ஹைதராபாத் அணி, ஒரே போட்டியில் 287 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துவிட்டது மற்றொரு போட்டியில் 277 ரன்களை குவித்து, ரெக்கார்டில் 2வது இடத்தையும் பிடித்துவிட்டது 272 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது மற்ற சீசனை விட ஹைதராபாத் அணி இந்த சீசனில் சிறப்பாகவே விளையாடி வருகிறது (All Photos Credits : PTI)