சப்யசாச்சி ஆடைகளை அம்பானி குடும்பம் ஏன் தவிர்த்தது தெரியுமா? முகேஷ் அம்பானியின் இளையமகனான ஆனந்திற்கும் வைரென் மெர்சன்டின் மகள் ராதிகாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது இந்த திருமணத்திற்காக, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அம்பானி குடும்பத்தினரின் ஆடைகள் சமூக வலைதளங்களில் பலரையும் வாயை பிளக்கச் செய்துள்ளது அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மணீஷ் மல்ஹோத்ரா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா (AJSK) வடிவமைத்த ஆடைகளை பயன்படுத்தியுள்ளனர் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் ஃபேஷன் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா, எம்எம் ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 40% பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது பிரபல டிசைனர் ரிதுகுமாரின் நிறுவனத்திலும் 52% பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது போட்டி நிறுவனமான சப்யசாச்சி ஆடைகளை தவிர்த்து, தங்களது பங்குகள் உள்ள மணீஷ் மல்ஹோத்ரா நிறுவனத்தின் ஆடைகளை அம்பானி குடும்பம் பயன்படுத்தியுள்ளது ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை, தங்கள் நிறுவனத்தின் விளம்பர தளமாகவும் அம்பானி குடும்பம் மாற்றியுள்ளது