ஆகஸ்டில் வங்கிக்கு எத்தனை நாள் விடுமுறை? - ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட்

Published by: ராஜேஷ். எஸ்

ஆர்பிஐ வெளியிட்ட பட்டியலின்படி, ஆகஸ்ட் 2026இல் மொத்தம் 14 வங்கி விடுமுறை இருக்கும்.

இந்த 14 விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இருக்காது. ஏனெனில் பல விடுமுறைகள் மாநிலம் சார்ந்த பண்டிகைகளுக்கானவை.

Published by: ராஜேஷ். எஸ்

ஆகஸ்ட் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 8 அன்று இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 22 அன்று நான்காவது சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 4 அன்று கேர் பூஜை கொண்டாட்டத்தின் போது திரிபுராவில் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 13 அன்று தேசபக்தர்கள் தினம் Patriots Day காரணமாக மணிப்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.

15 ஆகஸ்ட் அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 19 அன்று மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா பகதூர் அவர்களின் பிறந்தநாள் காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மிலாதுன் நபி, ஓணம் மற்றும் திருவோணம் போன்ற பண்டிகைகள் காரணமாக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஆகஸ்ட் 28 அன்று ரக்ஷா பந்தன், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி மற்றும் பிற பிராந்திய பண்டிகைகள் காரணமாக பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.