இந்திய கோடீஸ்வரரும் தற்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கெளதம் அதானி கடந்த ஆண்டில் தினசரி அடிப்படையில் மட்டும் சுமார் ரூ. 1,612 கோடி சம்பாதித்துள்ளார்
2022ம் ஆண்டுக்கான ஹுரூன் இந்தியாவின் தினசரி பணம் சம்பாதிக்கும் நபர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி கடந்த ஆண்டில் இரு மடங்கு (116%) சொத்துக்களுடன் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ந்தியாவின் 2022 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்களின் பட்டியலின்படி, அவர் தரவரிசையில் இரண்டாவதாக உள்ள அம்பானியை விட ரூபாய் 3,00,000 கோடிக்கு மேல் முன்னேறியுள்ளார்.
தொழிலதிபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கெளதம் அதானி, அதானி குழுமத்தின் பங்குகளில் கூர்மையான ஏற்றத்தால், உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, அதானி அமேசானின் ஜெஃப் பெசோஸை முந்திக்கொண்டு உலகின் இரண்டாவது பணக்காரர் என்கிற இடத்தைப் பிடித்தார்,
இப்போது டெஸ்லாவின் எலோன் மஸ்க்கைப் பின்தள்ளி, உலகின் பணக்கார மனிதராக இருக்கிறார்.
இத்தனைக்கும் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் டாப்-10 மனிதர்கள் பட்டியலில் அவர் பெயரே இடம்பெறவில்லை என்பது வேறு விஷயம்.
அவர் ஏப்ரலில் நூறு பில்லியன் ரூபாய் மதிப்புக்கு அதிபதியானார் மற்றும் கடந்த மாதம் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் பில் கேட்ஸை விஞ்சி உலகின் நான்காவது பணக்காரராக இருந்தார்.
கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர் 5 ஆண்டுகளில் 15.4 மடங்கு சொத்து வளர்ச்சி அடைந்துள்ளனர்.