இந்தியாவில் டெஸ்லா மாடல்-ஒய் காருக்கு போட்டியாக எந்த கார் இருக்கும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Tesla

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக மாடல் -Y-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

Image Source: Tesla

இந்தியாவில் EV பிரிவு வேகமாக வளர்ந்து வரும் சூழலில் டெஸ்லாவின் நுழைவு போட்டியை அதிகரிக்கும்.

Image Source: Tesla

Model Y யின் ஆரம்ப விலை 59.99 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயல்திறன் சார்ந்த மின்சார SUV ஆகும்.

Image Source: Tesla

Model Y 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 217 கிலோமீட்டர் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 533 கிலோமீட்டர் வரை செல்லும்.

Image Source: Tesla

Model Y காரானது BYD Sealion 7 உடன் போட்டியிடுகிறது. இதில் 12 ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 15.6 அங்குல சுழலும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

Image Source: Tesla

BMW iX1ல் 66.4kWh பேட்டரி உள்ளது, இது 417-440 கிமீ வரை செல்லும். இதன் அம்சங்களும், பிராண்ட் மதிப்பும் டெஸ்லாவுக்கு நேரடி போட்டியாக அமைகின்றன.

Image Source: Tesla

ஹூண்டாய் ஐயோனிக் 5 இல் இரட்டை 12.3 அங்குல திரை, காலநிலை கட்டுப்பாடு மற்றும் பிரீமியம் இருக்கைகள் உள்ளன, இது டெஸ்லா மாடல் Y க்கு போட்டியாக அமைகிறது.

Image Source: Tesla

கியா EV6 ஆனது ஆல் வீல் ட்ரைவ் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குகிறது, இது Model Y க்கு நேரடி சவாலாக அமைகிறது.

Image Source: Tesla

EQA ஓரு உயர்நிலை மின்சார வாகனம். இது டெஸ்லா மாடல் Y க்கு ஆடம்பர பிரிவில் போட்டியாக அமையும்.

Image Source: Tesla