விரய சனியால் கவலைப்பட வேண்டாம். பணி மாறுதலுக்கு இது உகந்த காலம் இல்லை. திருமண வரன்கள் கைகூடும். வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று அடிப்பிரதட்சணம் செய்யலாம்.
பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். கடன் சுமை குறையும். விரும்பிய வரன் அமையும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பெருமாள் கோயிலில் தாயாரை வழிபடுவது சிறப்பை தரும்.
வேலை கிடைக்கும். கடனை அடைக்கலாம். திருமண காரியம் கைகூடும். புத்திரப்பேறு கிடைக்கும். சோம்பேறிகளுக்கு எதுவும் நடக்காது. இவர்கள் தொழில் செய்யும் இடத்தை தெய்வமாக கருதினால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வழியை சனி பகவான் காட்டுவார். அனைத்து பிரச்னைகளும் விலகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். நீர் நிலைகளுக்கு அருகாமையில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
அஷ்டம சனியால் குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. அதிக கடன் வாங்குவது, கொடுப்பது கடன் கூடாது. தெரியாத இடங்களுக்கு யாரையும் நம்பி செல்ல வேண்டாம். காலையில் கோயில் செல்வது நன்மை கிடைக்கும்.
கண்டக சனியால் உங்களுடைய ராசிக்கு நல்லதே நடக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். எதையும் யோசித்து செய்வது நல்லது. முடியும் போது திருப்பதிக்கும், மற்ற நாட்களில் சனிக்கிழமையில் பெருமாளையும் வழிபடுவது சிறப்பானதாகும்.
வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தகுதி மீறி கடன் வாங்குவதை தவிர்க்கவும். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் சிவபெருமான் அல்லது முருகனை வழிபடுவது சிறப்பாகும்.
பூர்விக சொத்து கைக்கு வரும். குலதெய்வத்தை வேண்டினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புண்ணியம் செய்வதற்கு ஏற்றாற்போல தான் பலன்கள் கிடைக்கும் என்பதால் செய்யும் செயலில் கவனம் தேவை. உணவு, பணம் தானம் செய்யலாம்.
நல்லது சொல்லும்போது ஏற்றுக் கொள்ளுங்கள். வீடு,மனை போன்றவை வாங்கும் சூழல் அமையும். எண்ணங்கள் தான் உங்கள் கேரக்டரை வடிவமைக்கும் என்பதால் அதீத கவனமாக செயல்படுங்கள். விரும்பிய தெய்வத்தை விரமிருந்து வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.
ஏழரை சனி முடிகிறது. தொட்டதெல்லாம் கைகூடும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். தைரியம் இருந்தாலும் அது குரூட்டு தைரியமாக மாறிவிடக்கூடாது. இந்த காலக்கட்டத்திலும் குருவை வழிபட்டு எதையும் செய்வது சிறந்ததாகும்.
ஏழரையின் சனியின் கடைசி பகுதி என்பதால் சனி பகவான் இதுவரை கொடுத்த கஷ்டங்கள் குறையும். கடன் வாங்குவது, கொடுப்பதில் கவனம். பகையை வளர்க்காமல் முடிந்தவரை நட்புடன் செயல்படுங்கள். கணவன் - மனைவியாக இணைந்து காட்சி கொடுக்கும் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும்.
சனி பகவான் மீன ராசிக்கு வருவதால் எதற்கும் பயப்பட வேண்டாம். இந்த நேரங்களில் பெரிய முயற்சி செய்ய வேண்டாம். முதலீடு, வேலை விஷயத்தில் கவனம் தேவை. நம்பிக்கையை விடாமல் பிரச்னையை எதிர்கொள்வது எளிதாக சனிப்பெயர்ச்சி காலத்தை கடக்க உதவும். சனிபகவானை மனதார வணகுங்கள்.