Timely Publications என்ற சிறிய ரக பதிப்பக நிறுவனத்தை, ஸ்டான்லீயின் குடும்பம் நடத்தி வந்தது. ஸ் டான்லீ மார்வல் காமிக் புத்தகங்கள் உருவாக்க ஆரம்பித்தவுடன், அது மார்வல் காமிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. இவர், நாளிதழ்களில் வரும் இரங்கல் விளம்பரங்களை எழுதியுள்ளார். மன அழுத்தம் காரணமாக அதை விட்டுவிட்டார். ஒரு நாளிதழில் ஸ்டாலீக்கு 2 பக்க அளவிற்கு கேப்டன் அமெரிக்கா காமிக்ஸை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த காமிக்ஸ் அவருக்கு புகழை தேடி தந்தது. வித்தியாசமாக கதைகளை அமைப்பது, க்ரீயேட்டிவாக கதாப்பாத்திரங்களை உருவாக்குவது போன்ற திறமைகளை தனது தாயிடம் இருந்துதான் ஸ்டான்லீ கற்றுக் கொண்டாராம். ஸ்டான்லீ, முடிவெட்டும் சலூனிற்கு சென்றதே இல்லையாம். அவரது மனைவி ஜோனிதான்,என்றுமே ஸ்டான்லீயின் முடியை வெட்டுவாராம். ஸ்டான்லீ, 1990 ஆம் ஆண்டிலேயே மார்வலிலிருந்து விடைப்பெற்றுக்கொண்டார் ஸ்டான்லீ இதயக்கோளாறு, வயது மூப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணத்தில் காலமானார்.