Thiruvarur school boy : கையளவு CPU.. தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைக்கும் 9ம் வகுப்பு சிறுவன்..
விஞ்ஞான தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புதான் வருங்காலத்தில் திறவுகோல், இந்நிலையில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தனது கண்டுபிடிப்பால் வியக்க வைக்கிறார். திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த சேதுராசன் - சுதா தம்பதியினர் மகன் மாதவ். வெறும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் இவர், தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்பால் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். சிறுவயது முதலே கணினி மீது தீவிர ஆர்வம் கொண்ட மாதவ் வீட்டில் இருக்கும் போது நேரத்தை வீணாக்காமல் ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ், பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார். ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொருள் தொழிநுட்ப கலைஞருக்கு கூட இது அனைத்தும் தெரியுமா என்றால் சந்தேகமே. அதே நேரத்தில் கணினியை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்க கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் மாதவ்.