Flying car : வந்தாச்சு பறக்கும் கார்.. சாதனை படைத்த கிளெயின் விஷன் நிறுவனம்..
ஹாலிவுட் ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஸன் படங்கள்ல நாம பறக்கும் கார்களை பார்த்திருப்போம். ஏன் பெருநகரங்கள் இருக்கக்கூடிய டிராஃபிக் நெரிசலில் நின்று “ இப்போ நம்மகிட்ட ஒரு பறக்கும் கார் இருந்தா எவ்வளோ நல்லாருக்கும் ” என பல தருணங்கள்ல நினைத்திருக்கலாம். ஆனா கற்பனையாக மட்டுமே இருந்து வந்த பறக்கும் கார்கள் தற்போது பயன்பாட்டிற்கு வர இருக்கு. கிளைன்விஸன் (kleinvision) அப்படிங்குற ஸ்லோவோக்யா நிறுவனம் இந்த பறக்கும் கார்களை கண்டுபிடிச்சு அசத்தியிருக்காங்க. இந்த மாத தொடக்கத்துல இதுக்கான சோதனை ஓட்டம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி முடிச்சிருக்காங்க கெலின்விஸன். சோதனை ஓட்டத்தின் போது முதலில் சாதாரண காராக சாலையில் ஓடியிருக்கிறது இந்த பறக்கும் கார். சாலையில் 2 நிமிடம் 15 நொடிகள் பயணித்த பிறகு தனது இறக்கைகளை விரித்து வானத்தில் பறக்க தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்கு 190 கிமீ வேகத்தில் ஆகாயத்தில் பறந்து பின்ன தரையிரங்கி சாதனை படைத்துள்ளது. தரையிறங்கிய பிறகு மீண்டும் சாதாரண காராக மாறிவிடுகிறது.