Sanju Samson duck out : Duck Out! Duck Out! அன்று ரோகித்! இன்று சஞ்சு! சாதிப்பாரா சாம்சன்?
வாய்ப்பு கொடு வாய்ப்பு கொடுன்னு கேட்டீங்க ஆனா கொடுத்த வாய்ப்பை ஒழுங்க யூஸ் பண்ணலையேன்னு இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து 2 டக் அவுட் ஆன சஞ்சு சாம்சனை நெட்டிசன்கள் வசைப்பாடி வருகின்றனர்.
இலங்க்கைக்கு எதிரான டி20 இந்திய அணி 3-0 கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. இதன் தொடரில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயில் லெவனில் இடம் பெறவில்லை, இதனால் பொங்கிய ரசிகர்கள் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் கில்லுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட் ஆனார் சாம்சன், இதனால் அடுத்த போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து கொண்டிருந்த போது மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது,
எப்படியாச்சும் ப்ருவ் பண்ணிருங்க சாம்சன் என்று நினைத்துக்கொண்டிருந்த போது இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனார் சாம்சன்.
இதனால் கோபடைந்துள்ள ரசிகர்கள் சாம்சனை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இரண்டு போட்டியில் டக் ஆனதை வைத்துவிட்டு சாம்சனை குறை சொல்ல முடியாது. குறிப்பாக 2015-ல் இருந்து இந்திய அணிக்காக டி20யில் ஆடி வரும் சாம்சன் இது வரை 30 டி20 யில் மட்டுமே ஆடியுள்ளார், அவர்க்கு கொடுக்கபட்ட சில வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்தி தான் ஆடியுள்ளார்.
மேலும் மற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை விட சாம்சனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் மிக குறைவு தான்.
சாம்சனை போலவே இந்திய அணியோட ஒரு நாள் கேப்டன் ரோகித் சர்மா 2010-ல் இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் ஒரு நாள் தொடரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்திருப்பார். அப்போது ரசிகர்கள் ரோகித்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அதன் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ரோகித் நிருபித்து அதே இலங்கை அணிக்காக இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார்.
அதே போல ஒரு சில ஆட்டங்களை வைத்துக்கொண்டு சாம்சனின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காத்தால் வருங்காலத்தில் சஞ்சு சாம்சனும் ரோகித்தை போல சாம்சனுக்கு பார்முக்கு வருவார் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.