India in olympics 2024 : ”6 பதக்கம்.. 470 கோடியா! செவ்வாய்கே போயிருக்கலாம்” ரசிகர்கள் கடும் கோபம்!

Continues below advertisement

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு 470கோடி வழங்கியும் இந்தியாவால் ஒரு தங்கத்தை கூட வெல்ல முடியவில்லை, வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அவ்வளவு பணம் கொடுத்தது எங்கே சென்றது, இவ்வளவு பணத்தை விண்வெளிக்கு போயிவிட்டு வந்து விடலாம்  என்று இந்திய  அரசை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்துக்கொள்ள இந்திய சார்பில் மொத்தம் 117 வீரர்கள் அனுப்பப்பட்டனர். குறைந்தது 10 பதக்கங்களாவது கிடைக்கும் என்பது இந்தியாவின் இலக்காக இருந்தது. ஆனால் வெறும் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. இதில் ஒரு தங்கம்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை மற்றும் பெற்று பதக்க பட்டியலில் 71வது இடத்தை பிடித்தது. இந்த ஒலிம்பிக்கிற்காக இந்திய அரசின் சார்பில் வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் 2020-ஆம் நடந்த  டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு இந்திய அரசால் 88.5 கோடி செலவிட்டது. அப்போது இந்தியா ஏழு பதக்கங்களை வென்று இருந்தது
இதில்  பயிற்சியாளர்கள் செலவு, பயணச் செலவு உட்பட அனைத்தும் அடங்கியது.

அதனால இந்த ஒலிம்பிக் தொடரில்  கூடுதல் நிதி கொடுத்தால் நல்ல பயிற்சியாளர்களை நியமித்தால் அதிக பதக்கங்களை வெல்லாம் என்று 470 கோடி நிதியாக அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இஸ்ரோவோட மங்கல்யான் திட்டத்துக்கு செலவு செய்த தொகையை விட ஒலிம்பிக்கிற்கு செலவு செய்த தொகை அதிகம், மங்கல்யான் திட்டத்தின் மொத்த மதிப்பே 450 கோடிதான், குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு  விண்வெளிக்கு அனுப்பிய நாடு என்று இந்தியா படைத்தது.

2020 ஒலிம்பிக் தொடரை விட 5 மடங்கு அதிக பணத்தை செலவு செய்தும் இந்திய பதக்கத்தை வெல்லாமல் போனதற்கு என்ன காரணம் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த 470 கோடியும் சரியாக செலவிடப்பட்டதா? இதில் அதிகாரிகளுக்கு அதிக செலவு செய்யப்பட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram