
Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்
பஞ்சாபில் நடந்த கபடி போட்டியில், பவுல் அட்டாக் செய்து, வீதிகளை மீறி விளையாடிய வட இந்திய வீராங்கனைகளை தட்டி கேட்ட தமிழக வீராங்கனைகளை போட்டியின் நடுவர் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
2024-2025ம் ஆண்டிற்கான பல்களைகழகங்கள் இடையேயான பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாபில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அன்னை தெரசா, பெரியார் பல்கலைகழகம், பாரதியார் பல்களைகழகம் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன.
அதில் இன்றைய தினம் அன்னை தெரசா பல்கலைகழகத்திற்கும், தர்பங்கா பல்கலைகழகத்திற்கும் இடையேயான போட்டி நடைப்பெற்றது.. அப்போது நமது தமிழக வீராங்கனைகள் மீது, எதிரணியினர் விதிகளுக்கு புறம்பான பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு அணி வீராங்கனைகளும் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து அன்னை தெரசா பல்கலைகழக மாணவிகள் போட்டி நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் அவரும் வட இந்திய வீராங்கனைகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் நடுவருக்கும், தமிழக வீராங்கனைகளுக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிப்போக, பொறுமை இழந்த நடுவர், தமிழக வீராங்கனை ஒருவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதையடுத்து, அங்கே இரு அணி வீராங்கனைகளும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இருக்கைகளை எடுத்து வீசியதால் அங்கே பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு கபடி சங்கம் மற்றும் ராஜஸ்தான் கபடி சங்கம் இடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..